Header Logo
SLIC
Rhythams of Lanka
வடக்கு
ஆரம்பமானது வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக்

Jul 12, 2025 - 07:39 PM

ஆரம்பமானது வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக்
Mobitel inner

வடமாகாண பூப்பந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்த வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி இன்று (12) காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் ஆரம்பமானது.

 

குறித்த போட்டியில் கலந்து கொள்ள வடக்கு மாகாணத்தில் இருந்து 06 அணிகளும்,அதன் உரிமையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

வடமாகாண பூப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளரும், வடமாகாண பூப்பந்தாட்ட லீக் தலைவருமான எம்.பிரின்ஸ் லெம்பேட் தலைமையில் குறித்த போட்டி ஆரம்பமானது.

 

ஆரம்ப நிகழ்வான இன்று விருந்தினர்களாக மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்,மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,உதவி மாவட்டச் செயலாளர் வி.டில்சான் பயஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதன்போது விருந்தினர்கள் வரவேற்கப் பட்டதோடு,நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன்போது விருந்தினர்களாக கலந்து கொண்ட மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் இணைந்து வடமாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.

 

அதனை தொடர்ந்து அணிகளின் அறிமுகம் இடம் பெற்ற நிலையில் முதல் சுற்று ஆரம்பமானது. நாளை (13) மாலை 4.30 மணிக்கு இறுதிச் சுற்று மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற உள்ளது.


MOST READ

காணொளி
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

Mobitel Upahara