Jul 15, 2025 - 07:28 AM -
0
மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஓட்டங்களான 27 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வரலாற்று சரிவை சந்தித்தது.
போட்டியின் நாணய சுழற்சயில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்களான சமர் ஜோசப் (4 விக்கெட்டுகள்) மற்றும் ஜெய்டன் சீல்ஸ் (5 விக்கெட்டுகள்) ஆகியோரின் அபார பந்து வீச்சில் 180 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, சாய் ஹோப் (48) மற்றும் ராஸ்டன் சேஸ் (44) ஆகியோரின் பங்களிப்புடன் 190 ஓட்டங்கள் எடுத்து 10 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்படி, இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 301 ஓட்டங்கள் எடுத்து, மேற்கிந்திய தீவுகளுக்கு 291 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது.
இதற்கமைய, மூன்றாம் நாளில், அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் 27 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தது. மிட்செல் ஸ்டார்க்: 6/9 (6 விக்கெட்டுகள், 9 ஓட்டங்கள்) என்ற அபார பந்துவீச்சின் ஊடாக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஸ்காட் போலன்ட் ஹெட்ரிக் சாதனையை படைத்தார்.
இதன்படி, அவுஸ்திரேலியா அணி 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என தொடரை கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகளின் 27 ஓட்டங்கள், 1896 இல் தென்னாப்பிரிக்காவின் 26 ஓட்டங்களுக்கு அடுத்தபடியாக, டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.
இந்த வெற்றியின் ஊடாக அவுஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்தது.