Header Logo
SLIC
உலகம்
வட அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Dec 7, 2025 - 01:35 PM

வட அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Mobitel Inner 1278
EDEX Inner

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அலாஸ்கா மற்றும் கனடாவின் யூகோன் (Yukon) பிரதேசத்தின் எல்லையில் உள்ள இப்பிராந்தியத்தில், கடந்த 24 மணி நேரத்திற்குள் பல சிறியளவான தொடர்ச்சியான நிலநடுக்கங்களுக்கு மத்தியில் இந்த பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. 

இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீதிகளில் தஞ்சம் தஞ்சம் அடைந்தனர். 

நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலாஸ்காவின் ஜூனோவிற்கு வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், யுகோனில் உள்ள வைட்ஹார்ஸுக்கு மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் சுமார் 6 கடல் மைல் அல்லது 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக இது தரைமட்டத்திற்கு மிக அருகில் உணரப்பட்டது. 

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் மற்றும் தேசிய வானிலை மையமும், எந்த சுனாமி முன்னெச்சரிக்கையினையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278