வணிகம்
இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களை நிலைபேறான நீர் மற்றும் சூரிய வலுக் கட்டமைப்புகளுடன் மேம்படுத்த Deep Tec Engineering விரிவாக்கம்

Dec 10, 2025 - 02:15 PM -

0

 இலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களை நிலைபேறான நீர் மற்றும் சூரிய வலுக் கட்டமைப்புகளுடன் மேம்படுத்த Deep Tec Engineering விரிவாக்கம்

நிலைபேறான நீர் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் Deep Tec Engineering (Pvt) Ltd, புத்தாக்கமான மற்றும் சூழலுக்கு நட்பான தொழில்னுட்பங்களினூடாக கிராமிய சமூகங்களை மாற்றியமைப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது. குறைந்த வசதிகள் படைத்த கிராமங்கள் மற்றும் விவசாய குடும்பங்களுக்கு நீருக்கான நிலையான அணுகல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் 2015 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Deep Tec, புதுப்பிக்கத்தக்க நீர் பிரிவில் இலங்கையில் மிகவும் தாக்கம் செலுத்தும் பொறியியல் சேவைகள் வழங்குனராக வளர்ச்சியடைந்துள்ளது. 

இன்று, Deep Tec தனவசம் சோலர் நீர் பம்பிகள் பிரிவில் 28% சந்தைப்பங்கு எனும் தொழிற்துறையின் முன்னோடியான நிலையை கொண்டுள்ளது. தனது தொழில்னுட்ப சிறப்பு மற்றும் உறுதியான வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள், உலக வங்கி மற்றும் இதர சர்வதேச பங்காளர்கள் போன்றன அடங்கலாக பல சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்புகளுடன் இணைந்து, நிறுவனம் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சோலர் பம்பி திட்டங்களை வருடாந்தம் முன்னெடுக்கிறது. இந்த நீண்ட கால கைகோர்ப்புகளினூடாக, நிறுவனத்தின் உறுதி செய்யப்பட்ட ஆற்றல், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச நிலைபேறாண்மை மற்றும் சமூக அபிவிருத்தி முன்னுரிமைகளுடனான இணைவு போன்றன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

கடந்த தசாப்த காலப்பகுதியில், நாடு முழுவதிலும் தனது பிரசன்னத்தை நிறுவனம் விரிவாக்கம் செய்து, ஆயிரக் கணக்கான குடும்பங்கள் மற்றும் விவசாயிகளுக்கு வாழ்வை மாற்றியமைக்கும் நீர் வளங்களை பருகுவதற்கு, விவசாயத் தேவைகளுக்கு மற்றும் வாழ்வாதார விருத்திக்கு அணுகும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. Deep Tec இன் பிரத்தியேகமான மாதிரியில், மேம்படுத்தப்பட்ட சூரிய வலுத் தொழில்னுட்பங்கள் ஒன்றிணைக்கப்பட்டு, கிராமிய நீர் கட்டமைப்புகள் வினைத்திறனாக, தாங்கிக்கொள்ளக்கூடிய வகையில் மற்றும் மின்விநியோகக் கட்டமைப்பு அல்லது எரிபொருளில் தங்கியிராமல் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நிலைபேறாண்மைக்கான இந்த அர்ப்பணிப்பின் காரணமாக, இலங்கையின் பசுமைப் பொறியியல் நகர்வில் நிறுவனத்தை முன்னிலையில் திகழச் செய்துள்ளது. Deep Tec இன் வெற்றிகரமான செயற்பாடுகளில், அதன் முகாமைத்துவ பணிப்பாளர் திலின ஹெட்டியாரச்சியின் தலைமைத்துவம் மற்றும் தொலைநோக்குடைய செயற்பாடுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இலங்கையின் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதில் அவர் காண்பிக்கும் அதீத ஈடுபாட்டினால், நிறுவனத்தின் கலாசாரம் மற்றும் நோக்கு ஆகியன மேம்பட்டுள்ளன. சமூக பொறியியல் மற்றும் கிராமிய விருத்தி ஆகியவற்றுக்கான அவரின் பங்களிப்புக்காக பெரிதும் அறியப்படுகிறார். அண்மையில் நடைபெற்ற Iconic Awards 2025இல் 2025 ஆம் ஆண்டின் சிறந்த தொழில்முயற்சியாளர் எனும் கௌரவிப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அதனூடாக நீரை அணுகுவதை விரிவாக்கம் செய்தல், விவசாய சமூகத்தாருக்கு வலுவூட்டல் மற்றும் நாடு முழுவதிலும் புதுப்பிக்கத்தக்க வலு பின்பற்றலை மேம்படுத்தல் போன்றவற்றில் இவரின் அரப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஹெட்டியாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “நீரை அணுகுதல் என்பது அடிப்படை மனித உரிமையாகும். மிகவும் பின்தங்கிய சமூகங்களும் இந்த அடிப்படைத் தேவையை நிலைபேறான வழியில் பெற்றுக் கொள்வதை உறுதி செய்வது எமது இலக்காகும். புதுப்பிக்கத்தக்க வலு என்பது இலங்கையின் கிராமிய மட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு தொழில்னுட்ப தீர்வு மட்டுமல்ல, கண்ணியம், பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நீண்ட கால மீட்சியை குறிப்பதாக அமைந்துள்ளது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார். 

காலநிலையில் தங்கியிருக்கும் உட்கட்டமைப்புகளுக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் நிலையில், புத்தாக்கம், சமூக ஈடுபாடு மற்றும் பலம் பொருந்திய பங்காண்மைகள் போன்றவற்றில் Deep Tec தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. நிறுவனம் தனது சோலர் நீர் தீர்வுகளை மேம்படுத்தி அதன் தாக்கத்தை விரிவாக்கம் செய்வதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. அதனூடாக, தேசிய சூழல்சார் இலக்குகளுக்கு ஆதரவளிப்பதுடன், மேலும் பல கிராமிய குடும்பங்களின் நல்வாழ்வுக்கு பங்களிப்புச் செய்யவும் எதிர்பார்க்கிறது. 

உறுதியான செயற்பாடுகள், தலைமைத்துவம் மற்றும் தெளிவான நோக்கு ஆகியவற்றுடன் Deep Tec Engineering, இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தியின் அடுத்த கட்டத்தை – ஒரு தடவையில் ஒரு கிராமம் எனும் அடிப்படையில் முன்னெடுக்க தன்னை தயார்ப்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05