Dec 10, 2025 - 05:40 PM -
0
கொமர்ஷல் வங்கியானது, அபான்ஸ் PLC நிறுவனத்தின் தேசிய சில்லறை வர்த்தக வலையமைப்பில் விரிவான POS மற்றும் டிஜிட்டல் கட்டண தீர்வுகளை அறிமுகப்படுத்துகிறது. இது நாட்டில் வங்கி - சில்லறை வர்த்தக நிறுவனங்களின் பங்குடைமைக்கான புதிய அளவுகோலை அமைப்பதோடு, நிறுவன தர கையகப்படுத்தும் உள்கட்டமைப்பை வழங்குவதற்கான வங்கியின் திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த உடன்படிக்கையானது, நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட அபான்ஸை, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் திறன் கொண்ட சில்லறை விற்பனையாளர்களில் ஒன்றாக மாற்றும். அனைத்து முக்கிய சர்வதேச மற்றும் உள்நாட்டு அட்டை திட்டங்கள் மற்றும் QR கட்டணங்களை ஏற்கும் திறன் அதன் கிளைகளுக்கு வழங்கப்படும். மேலும், நவீன சில்லறை வர்த்தகத்திற்குத் தேவையான அளவீடு, பாதுகாப்பு, இடையிணக்கத்திறன் மற்றும் மீளக் கட்டுப்படுத்தும் தன்மை ஆகியவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நிறுவனத்தின் நிறுவன வளம் திட்டமிடல் (ERP) மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் (SCM) முறைமைகளுடன் தடையற்ற ஒருங்கிணைவு ஏற்படுத்தப்படும்.
அபான்ஸிற்காக கொமர்ஷல் வங்கி வழங்கும் வர்த்தகர் பெறுநர் தளங்கள் Visa, Mastercard, UnionPay, JCB, LankaPay, LankaQR ஆகியவற்றை உள்ளடக்கும். இதற்கு மேலதிகமாக WeChat Pay, Alipay, UnionPay, Visa QR மற்றும் Mastercard QR போன்ற சர்வதேச QR திட்டங்களுக்கு ஆதரவளிப்பதோடு மட்டுமல்லாமல், வங்கியின் இணைய கட்டண நுழைவாயிலையும் (Internet Payment Gateway) உள்ளடக்கிய ஒரே கட்டமைப்பின் கீழ் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன இந்த பல்வேறு ஊடக திறன் மூலம் வாடிக்கையாளர் கடையில் நேரடியாகவோ, நிகழ்நிலையிலோ அல்லது கைபேசி வழியாகவோ பணம் செலுத்தினாலும், அனைத்து பரிவர்த்தனைகளும் ஒரே ஒருங்கிணைந்த முறைமையின் மூலம் செயலாக்கப்படுகின்றன. இது சீர்செய்தலை இலகுவாக்கி வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துகிறது.இந்த தீர்வானது அட்டை மற்றும் QR கட்டணங்களை மட்டும் அல்லாது, இலகு கொடுப்பனவுத் திட்ட (EPP) வசதியையும் வழங்கக்கூடியது. இதன் மூலம் வர்த்தகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முழுமையான, எதிர்காலத்திற்குத் தகுந்த டிஜிட்டல் கட்டண அனுபவத்தை வழங்குகிறது.
பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் 2,500 POS சாதனங்கள் பல்துறை செயல்பாடுகளுடன் கூடிய, EMV சான்றளிக்கப்பட்ட முனையங்கள் ஆகும். இவை தொடுகையற்ற (contactless), சிப், மற்றும் மின்காந்த பட்டை (magnetic stripe) அட்டைகள் ஆகியவற்றை ஆதரிப்பதோடு, மாறும் QR (dynamic QR) ஏற்றுதலையும் கொண்டுள்ளன. ஒவ்வொரு கருவியும் அதிக பரிவர்த்தனை நடக்கும் சூழல்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அபான்ஸின் ERP மற்றும் SCM தளங்களுடன் பாதுகாப்பான API இணைப்பையும் வழங்குகின்றது. இதன் விளைவாக, நேரடி பரிவர்த்தனை பதிவேற்றம், உடனடி கையிருப்பு புதுப்பித்தல்கள், தானியக்கப்பட்ட பில்லிங் துல்லியம், மற்றும் முழு சில்லறைவர்த்தக வலையமைப்பிலும் தடையற்ற டிஜிட்டல் பதிவேட்டுப் பராமரிப்பு சாத்தியமாகிறது என வங்கி தெரிவித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் முறைமைகள் கடன் அல்லது வரவு அட்டை தகவல்களைப் பாதுகாக்கும் (PCI DSS) தரநிலைகளுக்கு முழுமையாக இணங்குகின்றன. இதில் முடிவிலிருந்து முடிவுக்கு குறியாக்கப் பாதுகாப்பு (point-to-point encryption), tokenisation மற்றும் பல அடுக்குகள் கொண்ட மோசடி கண்டறிதல் முறைமைகள் அடங்குகின்றன. தொடர்ச்சியான நேரடி கண்காணிப்பு, இடர் மதிப்பீடு மற்றும் அசாதாரண செயல்பாடுகளுக்கான எச்சரிக்கைகள் மோசடிகளில் இருந்து பாதுகாக்கின்றன. மேலும், தனிப்பட்ட சம்பவப் பதில் (incident response) அணியும் நியமிக்கப்பட்ட சேவை நிலை ஒப்பந்தங்களுக்கு (SLA) உட்பட்டு விரைவான தீர்வுகளை உறுதிசெய்கிறது.
இந்தபங்குடைமையானது தொழில்நுட்ப முன்னணித் திறனின் எடுத்துக்காட்டாகும், என்று கொமர்ஷல் வங்கியின் தனிநபர் வங்கிச் சேவைகளுக்கான பிரதிப்பொது முகாமையாளர் திரு. எஸ். கணேஷன் தெரிவித்தார். இந்த அளவிலான ஒருங்கிணைந்த POS மற்றும் டிஜிட்டல் கட்டண தீர்வை வழங்குவதன் மூலம், அபான்ஸ் மிக உயர்ந்த பாதுகாப்பு, இடையிணக்கத்திறன், மற்றும் செயல்பாட்டு நிலைத்தன்மையுடன் பரிவர்த்தனை செய்ய இயல்பாகின்றது. நவீன சில்லறை வர்த்தகத்தின் தேவைகளுக்கு ஏற்ப, நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்துடன் இணையும் சிக்கலான கட்டண சூழலை உருவாக்கும் திறன் கொமர்ஷல் வங்கிக்கு உள்ளது என்பதை இது நிரூபிக்கிறது.
அபான்ஸ் குழுமத்தின் பணிப்பாளர் டொக்டர் திருமதி எஸ். டூபாஷ் தெரிவிக்கையில்:
புதுமையையும், வாடிக்கையாளர் மையக் கண்ணோட்டத்தையும் இணைப்பதுதான் எமது முன்னுரிமையாகும். இந்த முறைமையானது எமது வாடிக்கையாளர்களுக்கு வேகமான, பாதுகாப்பான, மேலும் நெகிழ்வான கட்டண தெரிவுகளை வழங்குவதோடு, எமது பின்தள செயல்பாடுகள் துல்லியத்துடனும் திறனுடனும் நடைபெறுவதை உறுதி செய்கிறது. கொமர்ஷல் வங்கியுடன் இணைவது, டிஜிட்டல் சில்லறை வர்த்தகத்தில் முன்னோக்கிய ஒரு முக்கியமான படியைக் எடுக்க எம்மை இயல்பாக்குகிறது மேலும் இது நாட்டை பணம் செலுத்தாத பொருளாதாரமாக மாற்றும் முயற்சியில் எமது பங்களிப்பை வலுப்படுத்துகிறது. இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

