Dec 10, 2025 - 05:43 PM -
0
சில வாரங்களுக்கு முன்பு இலங்கை சந்தையில் பிரமாண்டமாக நுழைந்த DENZA நிறுவனம், தனது விரிவாக்க நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தியுள்ளது. BYD குழுமத்தின் ஆடம்பர மாற்று புதிய சக்தி வாகன (NEV) வர்த்தகநாமமான DENZA, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸில் உள்ள Shoppes வளாகத்தில் தனது முதல் காட்சியறையை திறந்துள்ளது. மேலும், அண்மையில் BMICH இல் நடைபெற்ற கொழும்பு மோட்டார் கண்காட்சி 2025இல் உத்தியோகபூர்வமாக அறிமுகமாகியுள்ளது.
புதிதாக திறக்கப்பட்ட இந்த மின்சார வாகன காட்சியறை, வாடிக்கையாளர்களுக்கு DENZA-வின் D9 மற்றும் உயர்தர சக்திவாய்ந்த SUV வரிசையான B5, B8 வாகனங்களை நவீனமான மற்றும் நேர்த்தியான சூழலில் அனுபவிக்க வாய்ப்பளிக்கிறது. இவை அனைத்தும் பிளக்-இன் ஹைபிரிட் (PHEV) தொழில்நுட்பத்துடன் வருகின்றன.
உயர்தர வசதி மற்றும் மேம்பட்ட செயல்திறனை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மாதிரிகள், DENZA-வின் அதிநவீன பல்நோக்கு பிரீமியம் வாகனங்கள் மற்றும் உயர் செயல்திறன் மாற்று புதிய சக்தி வாகனங்களின் அதிநவீன தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கின்றன.
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்த காலகட்டத்தில், உலகம் முழுவதும் நிலைபேறான போக்குவரத்து நோக்கிய நகர்வு வேகமாக வளர்ந்தது. அதே நேரத்தில், உயர்தர பயண அனுபவங்கள் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. தற்போது புதிய மாதிரிகள் சந்தையில் அறிமுகமாகி வருவதால், இதே போக்கு இலங்கையிலும் வலுவாக வேரூன்றுவதை காண முடிகிறது.
இதுதொடர்பில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய தாக்கம் கொண்ட வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட NEV தொழில்நுட்பமும் கொண்ட DENZA, ஆடம்பரம், வசதி மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைத்து அதிகரித்து வரும் வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்கிறது. மேலும், DENZA போன்ற உயர்தர வாகன வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்த, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸில் உள்ள Shoppes மிகவும் பொருத்தமான இடமாக அமைந்தது. என்று கூறினார்.
இந்த நிலையில், இலங்கை சந்தையில் தனது விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நவம்பர் 21 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு மோட்டார் கண்காட்சி 2025-இல் DENZA கலந்துகொண்டது.
இலங்கையின் முன்னணி வாகன கண்காட்சிகளில் ஒன்றான இந்நிகழ்வு, நாட்டில் உள்ள வாகன ஆர்வலர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெறுகிறது. அதுமாத்திரமின்றி, இது வாகன பிரியர்கள், குடும்பங்கள், விற்பனையாளர்கள் மற்றும் சப்ளையர்களை ஒன்றிணைக்கிறது. வாகன ஆர்வலர்கள், குடும்பங்கள், விற்பனையாளர்கள் மற்றும் வழங்குநர்களை ஒன்றிணைக்கிறது.
2010-ஆம் ஆண்டு BYD மற்றும் Mercedes-Benz இடையேயான கூட்டு முயற்சியாக நிறுவப்பட்ட DENZA, ஐரோப்பிய தாக்கம் கொண்ட வடிவமைப்பையும் மேம்பட்ட மின்சார வாகன தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. 2014-இல் தனது முதல் வாகனத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம், தற்போது ஐரோப்பா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளுக்கு விரிவடைந்துள்ளது. தெற்காசியாவில் DENZA நுழையும் முதல் நாடு இலங்கை ஆகும். காட்சியறை திறப்பு மற்றும் மோட்டார் கண்காட்சி பங்கேற்பு ஆகியவை உள்ளூர் சந்தையில் அதன் உயர்தர வாகனங்களை படிப்படியாக அறிமுகப்படுத்தும் திட்டத்தின் பகுதியாகும்.
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸில் உள்ள Shoppes இல் அமைந்துள்ள DENZA காட்சியறை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

