வணிகம்
கண்டி சிட்டி சென்டரில் நடைபெற்ற Splash Shopping Fiesta 2025-இல் பண்டிகை அனுபவத்தை மேம்படுத்திய NDB வங்கி

Jan 8, 2026 - 02:23 PM -

0

கண்டி சிட்டி சென்டரில் நடைபெற்ற Splash Shopping Fiesta 2025-இல் பண்டிகை அனுபவத்தை மேம்படுத்திய NDB வங்கி

கடந்த ஆண்டு டிசம்பர் 24 முதல் 28 வரை நடைபெற்ற இந்த பருவத்தின் மிகப்பெரிய ஷொப்பிங் திருவிழாவான Splash Shopping Fiesta 2025-இன் அதிகாரப்பூர்வ வங்கிப்பங்காளராக கண்டி சிட்டி சென்டருடன் NDB வங்கி பெருமையுடன் இணைந்தது. இந்த நிகழ்வானது, சில்லறை வர்த்தகம், பொழுதுபோக்கு மற்றும் பண்டிகைக் களிப்பு ஆகியவற்றின் உற்சாகமான கலவையுடன், ஆண்டு இறுதி காலத்தில் மத்திய மாகாண வாடிக்கையாளர்களுக்கு உயிர்ப்பான ஷொப்பிங் அனுபவத்தை வழங்கியது. 

NDB வங்கியானது அதிகாரப்பூர்வ வங்கிப்பங்காளராக, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வங்கி சலுகைகளை வழங்குவதன் மூலம், மொத்த அனுபவத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது. இந்த விழாவில் பங்கேற்ற NDB அட்டைதாரர்கள், 20% வரையிலான விலைக்கழிவுகளை பெறும் வாய்ப்பைப் பெற்றனர். இதன் மூலம், பண்டிகை கால ஷொப்பிங்கில் அதிக மதிப்பும் வசதியும் கிடைத்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு வாழ்க்கைமுறை சார்ந்த நன்மைகளை வழங்கும் NDB வங்கியின் அர்ப்பணிப்பும் மேலும் வலுப்பெற்றது. 

இந்த வாய்ப்பைப் பற்றி கருத்துத் தெரிவித்த NDB வங்கியின் கார்ட் சென்டர் தலைவர் மற்றும் உதவி துணைத் தலைவர் திரு. அஷான் விக்ரமநாயக்க, Splash Shopping Fiesta 2025 வங்கி வாடிக்கையாளர்களுடன் உறுதியான தொடர்பை உருவாக்குவதற்கான முக்கிய தளமாக செயல்பட்டதாக குறிப்பிட்டார். உற்சாகமும் அதிக ஈடுபாடும் கொண்ட சூழலில், வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள முறையில் இணைவதற்கு இந்த நிகழ்வு சிறந்த வாய்ப்பை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், இத்தகைய முயற்சிகள் பாரம்பரிய வங்கி தொடர்பு முனைகளைக் கடந்து, வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான தருணங்களில் அவர்களுடன் தொடர்பு கொள்ள NDB வங்கிக்கு வழிவகுப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

NDB வங்கியானது நிகழ்வுக்கு சிறப்பு பண்டிகைக் களிப்பை சேர்க்கும் வகையில், தனது பிரபலமான ‘சாண்டா பிரசாரத்தினை ’ Splash Shopping Fiesta 2025-க்கும் விரிவுபடுத்தியது. இதன் ஒரு பகுதியாக, கண்டி பிராந்தியத்தைச் சேர்ந்த NDB சாண்டா ஊக்குவிப்பு வெற்றியாளர்கள் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். அங்கு, சாண்டா நேரடியாக பரிசுகளை வழங்கியதால், பண்டிகைக் கொண்டாட்டங்களின் நடுவே குழந்தைகளும் குடும்பங்களும் மகிழ்ச்சியை அனுபவித்ததுடன் மறக்க முடியாத தருணங்களாகவும் அவை அமைந்தன. 

கண்டியின் மையப் பகுதியில் அமைந்துள்ள முன்னணி வாழ்க்கைமுறை மற்றும் சில்லறை வர்த்தக நிலையமான கண்டி சிட்டி சென்டரில் நடைபெற்ற Splash Shopping Fiesta 2025, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆண்டு நிகழ்வாக மீண்டும் தனது பெயரை நிலைநிறுத்தியது. சமூக மையப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை ஆதரிப்பதன் மூலம் பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவித்தல், வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் பண்டிகைக் காலத்தில் ஒன்றுபட்ட உணர்வை கொண்டாடுதல் ஆகியவற்றில் NDB வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை, இந்த நிகழ்வில் அதன் பங்கேற்பு பிரதிபலித்தது. Splash Shopping Fiesta 2025 போன்ற பங்குடைமைகள் மூலம், வாழ்க்கைமுறை அனுபவங்களுடன் வங்கி தீர்வுகளை இடையற்ற முறையில் ஒருங்கிணைக்கும், வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிதி பங்காளராக NDB வங்கி தொடர்ந்து தன்னை நிலைநிறுத்தி வருகிறது. அதே சமயம், அது சேவை செய்யும் சமூகங்களுடன் மேலும் ஆழமான தொடர்புகளை விருத்தி செய்யவும் இது உதவுகிறது. 

இலங்கையில் பட்டியலிடப்பட்ட நான்காவது பெரிய வணிக வங்கி NDB வங்கியாகும். 2025 ஆம் ஆண்டுக்கான யூரோமணி விருதுகளுக்கான சிறப்பு விருதுகளில், SME-களுக்கான இலங்கையின் சிறந்த டிஜிட்டல் வங்கியாக NDB பெயரிடப்பட்டது, மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிய வங்கி மற்றும் நிதி இதழ் (சிங்கப்பூர்) விருதுகளால் ஆண்டின் உள்நாட்டு சில்லறை வங்கி - இலங்கை மற்றும் இலங்கை உள்நாட்டு திட்ட நிதி வங்கி விருதை வென்றது. NDBஆனது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும், இதில் மூலதன சந்தை துணை நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரு தனித்துவமான வங்கி மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகின்றன. டிஜிட்டல் வங்கி தீர்வுகளால் இயக்கப்படும் அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்த வங்கி உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05