Header Logo

செய்திகள்
முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில்

Jan 9, 2026 - 12:19 PM -

0

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

பாராளுமன்றின் இன்றைய (9) அமர்வில் கலந்து கொண்டு, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் வழங்கிய சுகாதார அமைச்சர், கடந்த மாதம் ஒவ்வாமை காரணமாக சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 21 ஆம் திகதி மரணித்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். 

அதேநேரம் சிறுமியின் மரணம் தொடர்பில் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்தார். 

தற்போது வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். 

அந்த அறிக்கைகளின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

வைத்தியசாலையின் பணிக்குழாமினரின் அசமந்த போக்கினாலேயா இந்த மரணம் இடம்பெற்றுள்ளது? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். 

எனவே அந்த விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையாத விடயங்களை எதிர்வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

பாலத்தீவு திருவிழாவிற்குச் சென்றபோது சோகம்

title