செய்திகள்
இலங்கைக்காக சீன வெளிவிவகார அமைச்சர் வழங்கிய உறுதி

Jan 12, 2026 - 11:55 PM -

0

இலங்கைக்காக சீன வெளிவிவகார அமைச்சர் வழங்கிய உறுதி

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள வீதிகள், புகையிரத பாதைகள் மற்றும் பாலங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தினால் சீன அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் தலையிடுவதாக சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi) உறுதியளித்துள்ளார். 

இலங்கை விரைவில் வழமைக்குத் திரும்புவதற்குச் சரியான பாதையில் பயணிப்பதாகத் தான் நம்புவதாகவும், அதற்காக சீன அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் வாங் யீ மீண்டும் உறுதிப்படுத்தினார். 

இன்று காலை (12) சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு மேற்கொண்ட குறுகிய கால விஜயத்தின் போது அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்தார். 

டித்வா புயலுக்குப் பின்னர் சீனா இலங்கைக்கு வழங்கிய அவசர அனர்த்த நிவாரணங்களுக்காக, சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 

இரு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில் வர்த்தகம் மற்றும் முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. 

குறிப்பாக, டித்வா புயலுக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்முறை குறித்தும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05