செய்திகள்
வடக்கு கடலில் 7 இந்திய மீனவர்கள் கைது; 2 படகுகள் பறிமுதல்

Jan 21, 2026 - 01:36 PM -

0

 வடக்கு கடலில் 7 இந்திய மீனவர்கள் கைது; 2 படகுகள் பறிமுதல்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

யாழ்ப்பாணம் - கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

 

நேற்று (20) இரவு வேளையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05