Header Logo
Mogo Academy

விளையாட்டு
தென்னாபிரிக்கா அதிரடி; ஆப்கானிஸ்தானுக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Feb 11, 2026 - 12:40 PM -

0

தென்னாபிரிக்கா அதிரடி; ஆப்கானிஸ்தானுக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின்(D) பிரிவில் இன்று (11) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில், தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணிக்கு ஆரம்பம் சற்று சவாலாக அமைந்தது. அணித்தலைவர் எய்டன் மெர்க்ரம் 5 ஓட்டங்களுடன் பசல்ஹக் பரூக்கியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

எனினும், 2வது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த குயின்டன் டி கொக் மற்றும் ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ரியான் ரிக்கெல்டன் 28 பந்துகளில் 61 ஓட்டங்களைக் குவித்தார். மறுமுனையில் நிதானமாகத் துடுப்பெடுத்தாடிய குயின்டன் டி கொக் 41 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றார். 

ஆப்கானிஸ்தான் அணி சார்பாகப் பந்துவீச்சில் அணித்தலைவர் ரஷித் கான் சிறப்பாகச் செயல்பட்டு ஒரே ஓவரில் டி கொக் மற்றும் ரிக்கெல்டன் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தித் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அஸ்மத்துல்லா உமர்சாய் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இறுதிக்கட்டத்தில் தென்னாபிரிக்க வீரர்கள் மேற்கொண்ட அதிரடி காரணமாக அந்த அணி 187 என்ற வலுவான ஓட்டங்களை எட்டியது. 

இதன்படி, 188 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி தனது பதிலிளிப்புத் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara