Feb 12, 2026 - 10:48 AM
2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று (11) இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
கொழும்பில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 45 ஓட்டங்களை பெற்றார்.
அயர்லாந்து அணி சார்பாகப் பந்துவீச்சில் மார்க் அடேர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி, 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அயர்லாந்து அணி சார்பில் ஜார்ஜ் டாக்ரெல் அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்றார்.
அவுஸ்திரேலியா அணி சார்பாகப் பந்துவீச்சில் நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் சாம்பா ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

































