Header Logo
SLIC
பல்சுவை
பாகற்காய் சமைத்ததால் தாயை அடித்து கொன்ற மகன்!

Feb 21, 2026 - 01:43 PM

பாகற்காய் சமைத்ததால் தாயை அடித்து கொன்ற மகன்!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் டோங்கர்கான் கிராமத்தை சேர்ந்தவர் சுமித்ரா பெட்குலே (65). இவரது மகன் ஜெகதீஷ் பெட்குலே (37). இவர் மதுபோதைக்கு அடிமையானவர். 

இதன் காரணமாக அவரது மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஜெகதீஷ் தனது தாயுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில் இரவு ஜெகதீஷ் மதுபோதையில் வீடு திரும்பினார். அவருக்குப் பிடிக்காத உணவான பாகற்காய் சமைத்தது தொடர்பாக ஜெகதீஷ் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

வாக்குவாதம் முற்றிய நிலையில் கடும் ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ் தனது தாய் என்றும் பாராமல் கொடூரமாக கையால் அடித்து தாக்கினார். இதில் சுமித்ரா பெட்குலே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையடுத்து ஜெகதீஷ் கிராமத்தில் சுற்றித் திரிந்து, தனது தாயைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். அவர் போதையில் இருந்ததால் முதலில் அவரை நம்பாத கிராம மக்கள் பின்னர் சந்தேகம் அடைந்து, பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். 

உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது சுமித்ரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். 

இதைதொடர்ந்து ஜெகதீசை பொலிஸார் கைது செய்தனர். சுமித்ராவின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278