Header Logo
Mogo Academy

விளையாட்டு
உலக சாதனையை சமன் செய்த வில் ஜெக்ஸ்!

Feb 28, 2026 - 12:06 PM -

0

உலக சாதனையை சமன் செய்த வில் ஜெக்ஸ்!
Mobitel inner

2026 டி20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. 

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜெக்ஸ், 'ஆட்டநாயகன்' விருதை வென்றார். 

இதன் மூலம் டி20 உலகக் கிண்ண வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை (மொத்தம் 4 விருதுகள்) வென்ற வீரர் என்ற சாதனையை வில் ஜெக்ஸ் படைத்துள்ளார். 

இதன் மூலம் கெவின் பீட்டர்சன், லூக் ரைட், ஜோஸ் பட்லர் மற்றும் அடில் ரஷித் (தலா 3 விருதுகள்) ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். 

மேலும் ஒரு குறிப்பிட்ட உலகக் கிண்ண தொடரில் அதிகபட்சமாக 4 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற அவுஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வொட்சனின் (2012-ல் படைத்த சாதனை) உலக சாதனையை வில் ஜெக்ஸ் தற்போது சமன் செய்துள்ளார். 

அடுத்த போட்டிகளில் வில் ஜோக்ஸ் மீண்டும் ஆட்டநாயகன் விருது வெல்லும் பட்சத்தில், ஷேன் வொட்சனின் உலக சாதனையை முறியடித்து புதிய சரித்திரம் படைப்பார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara