Header Logo

செய்திகள்
போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் -டிரம்ப்

Mar 9, 2026 - 10:24 AM -

0

போரை நிறுத்துவது குறித்து கூட்டாகவே தீர்மானிப்போம் -டிரம்ப்

ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. 

தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் டிரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாங்கள் இருவரும் இது குறித்துப் கலந்துரையாடி வருகின்றோம். சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்கா தமது தாக்குதல்களை நிறுத்த முடிவு செய்தால், இஸ்ரேல் மட்டும் ஈரானுக்கு எதிரான போரைத் தொடர முடியுமா என இதன்போது வினவப்பட்டுள்ளது. 

அதற்கு பதில் வழங்கிய டிரம்ப், அத்தகைய ஒரு சூழல் உருவாக வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார். 

அதற்கான அவசியம் ஏற்படும் என்று தாம் நினைக்கவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது குறித்துக் கேட்டபோது, என்ன நடக்கிறது என பார்ப்போம் எனக் கூறி அது குறித்துக் கருத்து தெரிவிக்க டிரம்ப் மறுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

இருப்பினும், முன்னதாக மொஜ்தபாவுக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்த டிரம்ப், கமேனியின் மகனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார். 

அத்துடன் தமது ஆதரவின்றி தெரிவு செய்யப்படும் தலைவர் நீண்ட காலம் உயிருடன் இருக்கப் போவதில்லை எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

title