Mar 9, 2026 - 10:33 PM -
0
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தமது தண்டனைகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நாளை (10) வரை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, பிரதிவாதி நளின் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
நாளைய தினம் அலி சப்ரி மேலதிக சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து பிரதிவாதி மஹிந்தானந்த அளுத்கமகே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாம் விடயங்களை முன்வைக்கவுள்ளது.
