Header Logo

செய்திகள்
ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞன் விளக்கமறியலில்

Mar 9, 2026 - 11:40 PM -

0

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இளைஞன் விளக்கமறியலில்

ஆனமடுவ பகுதியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞன் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், அவரை மனநல மருத்துவரிடம் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு திசைக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: 

"இது சமூக வலைதளங்களில் வைரலான ஒரு சம்பவமாகும். பொலிஸ் மா அதிபரும் அந்த வீடியோவை எனக்கு அனுப்பி, இவ்வாறான ஒழுக்கமற்ற சாரதிகளை உடனடியாக கைது செய்யுமாறு அறிவுறுத்தினார். இது சமூகத்திற்கு தவறான முன்மாதிரியாகும். இந்த வீடியோ கிடைத்தவுடன், எமது தரவுத்தளத்தை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்தோம். நேற்று இரவு அரை மணி நேரத்திற்குள் உரிமையாளர் வசிக்கும் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டு, உடனடியாக மோட்டார் சைக்கிளையும் பின்னால் பயணித்தவரையும் கைது செய்ய பணித்தேன். 

உடனடியாக நவகத்தேகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுற்றிவளைப்பை மேற்கொண்டு முதலில் மோட்டார் சைக்கிளை கைப்பற்றினார். அந்த நேரத்தில் சாரதி ஒளிந்திருந்தார், அரை மணி நேரத்தின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். பின்னால் பயணித்தவர் தற்போது தலைமறைவாகியுள்ளார். 

கொலை முயற்சி, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை மற்றும் கவனயீனமாக வாகனம் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். 

19 வயதுடைய இந்த நபர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டம் நிச்சயமாக கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞராவார். 

சம்பவம் தொடர்பில் நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

யுத்தம் தொடர்பில் நடுநிலையான கொள்கையில் இருக்கிறோம்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

அவசரக்கால சட்டம் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்படும்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

பாராளுமன்றில் அடைக்கலநாதன்!

title