Header Logo

செய்திகள்
போர் எப்போது முடியும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்: ட்ரம்ப்பிற்கு ஈரான் பதிலடி

Mar 10, 2026 - 09:55 AM -

0

போர் எப்போது முடியும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்: ட்ரம்ப்பிற்கு ஈரான் பதிலடி

ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என ஈரான் இதன்போது தெரிவித்துள்ளது. 

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தார். 

புதிய கடும்போக்குவாத உச்சநிலைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ள இஸ்லாமியக் குடியரசானது (ஈரான்), உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைத் தடுத்தால் போர் தீவிரமடையக்கூடும் என்றும் ட்ரம்ப் அங்கு எச்சரித்திருந்தார். 

இருப்பினும், அதற்குப் பதிலளித்துள்ள ஈரான், போரை முடிவுக்குக் கொண்டுவரும் முடிவைத் தாங்களே எடுப்பதாகக் கூறியுள்ளது. 

பிராந்தியத்தின் எதிர்காலம் தற்போது தெஹ்ரானின் படைகளின் கைகளிலேயே உள்ளது என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை வலியுறுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

பல இலட்சம் பெறுமதியான பணம், நகைகள் மீட்பு

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

அமெரிக்கா நடத்தும் யுத்தமும் நியாயமானது தானே!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

மனிதாபிமானத்தில் இலங்கைக்கு முதலிடம்!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

முஸ்லிம் மக்களுக்கு பொருத்தமான கட்சி தான் தேசிய மக்கள் சக்தி!

title