Header Logo

சினிமா
விஜய் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்!

Mar 10, 2026 - 03:51 PM -

0

விஜய் மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார்!

நடிகர் விமல் நடிப்பில் `வடம்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அப்படத்தின் விளம்பரப்படுத்த வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று தியேட்டர்களில் ரசிகர்களுடன் படம் பார்த்து வருகிறது இந்தப் படக்குழு. அப்படி கோவையில் சென்று படம் பார்த்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகர் விமல். அதில் விஜயின் அரசியல் வருகை பற்றி பேசினார். 

விமல் பேசியபோது, "நான் விஜய் ரசிகர். `கில்லி' படத்தில் அவருடன் இணைந்து நடித்தேன். அந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருடன் பேசி பழக வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு, அவரைச் சந்திக்க வாய்ப்பு அமையவில்லை. ஆனால் அப்போது எப்படி இருந்தாரோ, இப்போதும் அப்படித்தான் இருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். அவரது அரசியல் பயணம் வெற்றியடையட்டும். 

அவருடன் இணைவேனா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். இப்போதைக்கு சினிமாவில் ஒரு நடிகராக, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என இருக்கிறேன். அரசியலில் நல்லது செய்பவர்களுக்கு ஆதரவாக பயணிக்க வேண்டும். நல்ல விஷயங்களைச் செய்யும் எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, மக்களுக்கு நல்லது செய்தால் சந்தோசம்தான். இவரும் நல்லது செய்வார் என தோன்றுகிறது. இதைத் தாண்டி எனக்கு அரசியல் பற்றிய அறிவு இல்லை. எனவே அரசியல் வேண்டாம், சினிமாவே போதும்" என்றார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title