Header Logo
SLIC
வணிகம்
தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026

Mar 11, 2026 - 01:40 PM

தனியார் சுகாதார சேவைத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிபுணர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026
Mobitel Inner 1278
EDEX Inner

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம் முதல் முறையாக ஏற்பாடு செய்த சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026, மார்ச் 9ஆம் திகதி வோட்டர்ஸ் ஏஜ் வளாகத்தில் மிகவும் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் தனியார் வைத்தியசாலைத் துறையின் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்துனர்கள், காப்புறுதி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், இலங்கையின் சுகாதார சேவைத் துறையில் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு அவை கலந்துரையாடப்பட்டன. 

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தனியார் வைத்தியசாலைப் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு, தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தும் பேரவையின் நேரடி மேற்பார்வைக்கு உட்பட்டுள்ள தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவை மையங்களின் உறுப்பினர்களை இது உள்ளடக்கியுள்ளது. இலங்கையின் முன்னணித் தரத்திலான அனைத்துத் தனியார் வைத்தியசாலைகளும் கிட்டத்தட்ட உறுப்பினர்களாகக் கொண்ட இச்சங்கம், நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார சேவைத் துறையின் முன்னேற்றத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வருகிறது. இதன்மூலம் அரச வைத்தியசாலைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நோயாளிகளின் நலனுக்காக தொடர்ச்சியான பலத்தை வழங்குவதற்கும் உதவுகிறது. சுகாதார அமைச்சு மற்றும் தனியார் சுகாதார சேவைகள் ஒழுங்குபடுத்தும் பேரவையுடன் பேணப்பட்டுவரும் உறவுகளின் அடிப்படையில், தனியார் வைத்தியசாலைத் துறையின் தர மற்றும் நோயாளர் பாதுகாப்புத் தரங்களைப் பேணுதல், சுகாதார சேவைப் பணியாளர்களின் அபிவிருத்திக்கு ஆதரவளித்தல், தொழில்முறைப் பயிற்சி வாய்ப்புக்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பேணுவதை ஊக்குவித்தல் மற்றும் தேசிய சுகாதார முன்னுரிமைகளுக்கு இணங்க சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான ஆதரவை இச்சங்கம் வழங்குகிறது. 

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கத்தின் தலைவர் ரவீன் விக்கிரமசிங்க, APHNH சுகாதார சேவை தலைமைத்துவ மாநாடு 2026 குறித்து கருத்துத் தெரிவிக்கையில், எங்களது நோக்கம், சரியான முடிவுகளை எடுக்கும் குழுவை ஒரே இடத்திற்கு அழைத்து, செயல்படுத்தக்கூடிய விஷயங்கள் குறித்து கலந்துரையாடுவது மட்டுமல்ல; இன்று எடுக்கப்படும் முடிவுகளை எதிர்காலத்தில் மிகவும் தெளிவான, பின்தொடரக்கூடிய நடவடிக்கைகளாக மாற்றுவதும், தரத்தை வலுப்படுத்தி, ஊடுருவும் தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கையுடன் கூடிய சுகாதார சேவையை வழங்கி, தேசிய சுகாதார அமைப்பை வளர்ப்பதும் இதன் அடிப்படை நோக்கங்களாக இருந்தன. என தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சித்திட்டம் இரண்டு அமர்வுகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. சுகாதார சேவைத் தலைமைத்துவத்தின் உள் நோக்கு: உண்மையில் எது செயல்படுகிறது? (Inside Healthcare Leadership: What Really Works) மற்றும் இலங்கையின் தனியார் வைத்தியசாலைத் துறையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புதல் (Building the Future of Private Healthcare in Sri Lanka) ஆகிய தலைப்புகளின் கீழ் அமர்வுகள் இடம்பெற்றன. 

முதல் அமர்வில் கலந்துகொண்ட உலகளாவிய மருத்துவ நிபுணர் மற்றும் வைத்தியசாலை உருவாக்குநர் டொக்டர் ஹபீஸ் ரஹ்மான் பதியத், சுகாதார நிர்வாகம், செயல்பாடுகள் மற்றும் கொவிட் தலைமைத்துவத் துறையைச் சேர்ந்த டொக்டர் ஹம்தானி அன்வர், மற்றும் காப்புறுதித் துறையின் சாந்தனி எல். அலுத்கம ஆகியோர் கலந்துகொண்டனர். தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் வைத்தியசாலைச் சேவைகளைப் பேணுவது எப்படி? செயல்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் அழுத்தத்திற்கு மத்தியில் நோயாளர் பாதுகாப்பைப் பேணுதல் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காப்புறுதி எதிர்பார்ப்புகள் மற்றும் இடர் மதிப்பீடுகளுக்குப் பதிலளித்தல் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

இரண்டாவது அமர்வில், எதிர்கால வாய்ப்புக்கள் மற்றும் சீர்திருத்தப் பாதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தாய்லாந்து தனியார் வைத்தியசாலைகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் பைபூன் எக்சாங்ஸ்ரி (Dr. Paiboon Eksangsri) வழிநடத்திய கலந்துரையாடல் மன்றம் முக்கிய இடம்பிடித்தது. 

இந்த அமர்வில், தாய்லாந்தின் தனியார் சுகாதார சேவை அபிவிருத்தியிலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள், அழுத்தமான காலங்களில் தேசிய சுகாதார அமைப்புகளுக்கு தனியார் வைத்தியசாலைகள் வழங்கக்கூடிய ஆதரவு, அரசாங்கம், சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம், சுகாதார முதலீடு மற்றும் புதுமைப்படுத்தலுக்காக இலங்கையை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்குத் தேவையான நிபந்தனைகள் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

மாநாட்டின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட டொக்டர் பைபூன் எக்சாங்ஸ்ரி கூறியதாவது: 

இலங்கையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொள்வது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகும். இந்த சந்தர்ப்பத்தின் ஊடாக அர்த்தமுள்ள கலந்துரையாடல்கள், கலாசாரப் பரிமாற்றங்கள் மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் வலுவான ஒத்துழைப்புகளை கட்டியெழுப்ப நான் எதிர்பார்க்கின்றேன். 

மாநாட்டின் முக்கிய விளைவுகளில் ஒன்றாக, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம், முன்வைக்கப்பட்ட யோசனைகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, செயல்படுத்தக்கூடிய மற்றும் மேற்பார்வைக்கு எளிதான ஒருங்கிணைந்த விளைவுகள் ஆவணம் அல்லது பிரகடனத்தாள் (Charter) ஒன்றாக தொகுக்கத் திட்டமிட்டுள்ளது. அவ்வாவணத்தில் உறுதியான நடவடிக்கைகள், பொறுப்புகள், கால அட்டவணைகள் மற்றும் அவ்வப்போதைய முன்னேற்ற அறிக்கைகள் ஆகியன உள்ளடக்கப்படவுள்ளன. தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கம், தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து, தனியார் துறைக்குள் தரவு முகாமைத்துவ முறைமைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் மீண்டும் வலியுறுத்தியது. அதற்காக, தரப்படுத்தப்பட்ட ஊடுருவும் நடைமுறைகள், நோயாளிகளுடனான தெளிவான தொடர்பாடல் தரங்கள், மற்றும் சேவைகளின் தரத்தைக் கண்காணிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட முறைமைகள் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டது. 

இந்த மாநாடு அழைப்புக்கு மாத்திரமானதாக நடத்தப்பட்டது. இது, இலங்கையின் சுகாதார சேவை வழங்கலின் எதிர்காலத்தை வடிவமைக்கும் துறையில் நேரடிப் பங்களிப்பைக் கொண்ட பங்குதாரர்களை ஒன்றிணைப்பதற்கான தனியார் வைத்தியசாலைகள் மற்றும் செவிலியர் சேவைகள் சங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278