Header Logo

சினிமா
கிட்னி திருட்டு வழக்கில் நடிகை ஜூலி?

Mar 18, 2026 - 09:33 AM -

0

கிட்னி திருட்டு வழக்கில் நடிகை ஜூலி?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பேச்சில் ஜல்லிக்கட்டு தொடர்பாக குட்டி கதை ஒன்று தெரிவித்தது குறித்து நடிகை ஜூலி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தார். வீடியோவாக வெளியிட்ட நடிகை ஜூலிக்கு நேர் எதிர் கருத்துக்கள் சமூக வலைதளத்தில் எழுந்தன. இந்நிலையில் தான் கிட்னி விற்பனை மோசடியில் செவிலியராக பணியாற்றிய நடிகை ஜூலிக்கு தொடர்பு இருப்பதாக கூறி சமூக வலைதளத்தில் வீடியோக்களும் வெளியானது. இது தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி தொடர்ந்து யூடியூபர்கள் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர். 

கிட்னி தேவைப்பட்ட நபர் ஒருவர் 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாகவும், ஆனால் தங்களுக்கு கடைசி வரை கிட்னி வரவில்லை என ஆடியோவில் பேசியுள்ளார். பெசன்ட் நகரில் வைத்து ஜுலியிடம் 15 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தீர்க்களா? என கேட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் ஆம் என தெரிவித்த ஆடியோ வெளியாகியுள்ளது. 

மற்றொரு ஆடியோவில், ஜுலியின் நெருங்கிய தோழியான சர்மிளாவும், அவரது கணவரும் கிட்னி தேவைப்படும் நபருக்கு உதவிதான் செய்ததாகவும், அதற்கு அந்த நபர் அன்பளிப்பாக இரண்டு முறை 50 ஆயிரம் ரூபாயாக மொத்தம் 1 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்ததாக சர்மிளா அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இவை அனைத்தும் பெரம்பலூரில் இயங்கி வரும் பிரபல தனியார் வைத்தியசாலையில் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சர்மிளாவின் கணவர் இது குறித்து பேசிய ஆடியோவில், இந்த கிட்னி விசயம் அனைத்தும் ஜுலிக்கு தெரியும் அவர் செவிலியராக இருந்தபோதும் இது சட்டத்திற்கு புறம்பானது என தங்களை தடுக்கவில்லை எனவும் பேசியுள்ளார். 

மேலும் பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தெரிவித்ததால், ஜுலியின் தோழியான சர்மிளா அவரை மிரட்டியதாகவும் ஆடியோ வெளியாகியுள்ளது. 

இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளும் பொய்யான செய்திகளையும் பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜுலி, நேரில் புகார் அளித்துள்ளார். 

குறிப்பாக நெல்சன் மற்றும் கார்த்திக் குமார் ஆகியோர் சமூக வலைதளத்தில் கிட்னி விற்பனை மோசடி தொடர்பாக பொய்யான அவதூறுகளை தன்னைப் பற்றி ஆதாரங்களுடன் வெளியிடுவதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் தனது ரெட் பிக்ஸ் சேனல் மூலமாக பொய்யான அவதூறு செய்திகளை தன்னைப் பற்றி வெளியிடுவதாகவும் தனக்கு எதிரான நபர்களை பேட்டி எடுப்பதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார் 

மேலும் தனது திருமண வாழ்க்கை குறித்தும் அவதூறு பரப்புவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற பொய்யான அவதூறு கருத்துக்கள் தன்னுடைய வளர்ச்சி பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

தான் மனித உடல் உறுப்பு கடத்தல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட எந்தவித செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், பொய்யாக தன்னை குற்றம் சாட்டுவதாக கூறிய சம்பந்தப்பட்ட நபர்களை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜுலி கோரிக்கை விடுத்துள்ளார். 

ஏற்கனவே ஜுலி மற்றும் அவரது தோழி சர்மிளா மீது ஆடியோ ஆதாரங்களோடு ஒரு தரப்பினர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், ஜுலியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொய்யான செய்திகளை பரப்புவதாக புகார் அளித்துள்ளார். ஜுலி மற்றும் அவரது தோழி சர்மிளா ஆகியோர் இந்த குற்றத்தில் ஈடுபட்டார்களா? இல்லை இது அவர்கள் மீதான பொய்யான குற்றச்சாட்டா? என்பது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title