Header Logo

சினிமா
ஜனநாயகன் பட மறுதணிக்கை நிறைவு?

Mar 18, 2026 - 01:47 PM -

0

ஜனநாயகன் பட மறுதணிக்கை நிறைவு?

விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி திரைக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் படம் மறுதணிக்கையாவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து படம் வெளியாவது திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா மறுஆய்வுக் குழு பார்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். 

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை அடுத்து படக்குழு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. வழக்கை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. 

சுப்ரீம் கோர்ட்டு வழக்கை விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தர வுக்கு தடை விதித்ததோடு தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் அளித்து வழக்கை மீண்டும் விசாரிக்க தனி நீதிபதி பி.டி. ஆஷாவுக்கு உத்தரவிட்டது. 

இந்நிலையில் 'ஜன நாயகன்' பட மறுதணிக்கை தொடர்பான வழக்கு திரும்ப பெறப்பட்டது. இதை தொடர்ந்து மறு தணிக்கைக்கு படத்தை படக்குழு அனுப்பி இருக்கிறது. 

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்திற்கான மறு ஆய்வு மும்பையில் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளனவா என மறு ஆய்வின்போது சரிபார்க்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்வையிட தணிக்கைக் குழு பரிந்துரை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title