Mar 28, 2026 - 06:50 PM -
0
இலங்கைப் பொலிஸ் சேவையின் உப சேவை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (சட்ட உத்தியோகத்தர்கள்) பதவிக்கு சட்டத்தரணிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கால நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மார்ச் 27ஆம் திகதி வெளியிடப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, உப சேவை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (சட்ட உத்தியோகத்தர்) பதவிக்கு 100 சட்டத்தரணிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
இதற்கான விண்ணப்பங்களை: இயக்குநர், பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவு, இலக்கம் 375, ஸ்ரீ சம்புத்த ஜயந்தி மாவத்தை, கொழும்பு 06 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பொலிஸ் ஆட்சேர்ப்புப் பிரிவின் 071 - 859 19 25, 011 - 250 52 02 மற்றும் 011 - 255 29 53 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
