Mar 28, 2026 - 07:28 PM -
0
ரைகம் டெலீஸ் (Raigam Tele'es) 2025 விருது வழங்கும் விழா தற்போது கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த விழாவில் தெரண ஊடக வலையமைப்பு பல விருதுகளை வென்றுள்ளது:
நடுவர் குழுவின் விசேட பாராட்டு விருது - நந்துன் அபேரத்ன (செய்தி அம்சம்: கன்டெய்னர்களுக்குள் வளர்க்கப்படும் காய்கறிகள்)
ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி கல்வி நிகழ்ச்சி - கே.சி. சாரங்க (ஜீவிதயட வித்யாவ)
ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி இசை நிகழ்ச்சி - யுகாத்ரா (விமுக்தி ருத்ரிகோ)
நடுவர் குழுவின் திறமைக்கான விருது - யெல சிஹ அபிமன் நிகழ்ச்சி (ரஞ்ஜீவனி பெத்தேவிதான)
ஆண்டின் சிறந்த ஒற்றைப்பகுதித் தொடர் (Single Episode Teledrama) - மம மா நொவ (சமன் பிரியந்த விஜேதுங்க)
ஆண்டின் மிகவும் பிரபலமான (மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட) செய்தி ஒளிபரப்பு - "அத தெரண"
