Header Logo

செய்திகள்
19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

Mar 29, 2026 - 08:59 PM -

0

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக காயங்களுக்கு உள்ளானதாலும், அவர்களின் மோசமான ஆட்டத்திறன் காரணமாகவும், ஶ்ரீ லங்கா கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டு அமைச்சு இணைந்து வீரர்களுக்காகப் புதிய உடற்தகுதிப் பரிசோதனை முறையைத் தொடங்கியுள்ளன. 

இந்த உடற்தகுதித் தேர்வானது 2 கிலோமீட்டர் ஓட்டம் மற்றும் சரும மடிப்புப் பரிசோதனை உள்ளிட்ட 5 வகையான சோதனைகளைக் கொண்டுள்ளது. 

ஒவ்வொரு சோதனையிலும் வீரர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த மதிப்பெண் கணக்கிடப்படும். ஒரு வீரர் இந்த உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 17 புள்ளிகளுக்கு மேல் பெற வேண்டும். 

அண்மையில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற 46 வீரர்களில் 27 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

புள்ளிகளின் அடிப்படையில் வீரர்கள் பின்வருமாறு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர், 

0 - 16 புள்ளிகள்: உடற்தகுதி தோல்வி (19 வீரர்கள் இந்தப் பிரிவில் உள்ளனர்) 

17 - 21 புள்ளிகள்: நடுத்தரம் (16 வீரர்கள்) 

22 - 25 புள்ளிகள்: நன்று (9 வீரர்கள்) 

26 - 29 புள்ளிகள்: மிகச் சிறப்பு (2 வீரர்கள் மட்டுமே) 

இலங்கைத் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கும், லீக் போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கும் இந்த உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்தத் தேர்வில் தொடர்ச்சியாக தோல்வியடையும் வீரர்கள், வருங்காலப் போட்டித் தேர்வுகளுக்குக் பரிசீலிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஶ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

மீனவர் பிரச்சினையில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்!

யாழை உலுக்கிய விபத்து!

யாழை உலுக்கிய விபத்து!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி!

அமைச்சர் அதிரடி!

அமைச்சர் அதிரடி!

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக வீழ்ச்சி

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

மட்டக்களப்பில் கொதித்தெழுந்த மக்கள்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

title