Header Logo

இந்தியா
விஜய்யின் பிரமாண பத்திரத்தை 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம்

Apr 6, 2026 - 11:44 AM -

0

விஜய்யின் பிரமாண பத்திரத்தை 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம்

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரங்களைப் பார்ப்பதில் பொதுமக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் சொத்து மற்றும் பின்னணி விவரங்களை அறிந்துகொள்ள லட்சக்கணக்கானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்திய தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://affidavit.cci.gov.in/ பக்கத்தில் அனைத்து வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 

ஒரு வேட்பாளரின் சொத்துகள் விவரம், குற்ற வழக்குகள் நிலுவை குறித்த வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இதில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

இந்த தேர்தலில் முதன் முறையாக களம் காணும் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது பிரமாண பத்திரத்தை மட்டும் இணையதளத்தில் இருந்து அதிகபட்சமாக சுமார் 3.20 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதிலும் இந்த எண்ணிக்கை சாதனை படைத்துள்ளது. 

அவருக்கு அடுத்தப்படியாக மு.க.ஸ்டாலினின் பிரமாண பத்திரத்தை சுமார் 1.30 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title