Header Logo
SLIC
Rhythams of Lanka
சினிமா
அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

Apr 8, 2026 - 02:33 PM

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
Mobitel inner

அல்லு அர்ஜுனின் 22 ஆவது படம் பான் வேர்ல்டு படமாக உருவாக இருக்கிறது. இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தை கோலிவுட், பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த அட்லீ இயக்குகிறார். 

அட்லீக்கு இது 6 ஆவது படமாகும். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். 

ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் அட்லி இணைந்துள்ள படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. 

அதன்படி, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை பார்க்கும் போது அல்லு அர்ஜுன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 


MOST READ

காணொளி
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

கள்ளர்கள் எல்லோரும் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!

நீங்க சண்டியனா!

நீங்க சண்டியனா!

பேருந்து சேவை பாதிப்பு

பேருந்து சேவை பாதிப்பு

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

எந்தவொரு தனிப்பட்ட பிரச்சனையும் கிடையாது!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தீர்த்தோற்சவம்!

தீர்த்தோற்சவம்!

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

இலங்கை முழுவதும் ஆடி அமாவாசை வழிபாடு

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

நீங்கள் எங்கள் தொப்புள்கொடி உறவு தான்!

தேர்த்திருவிழா!

தேர்த்திருவிழா!

Mobitel Upahara