Apr 8, 2026 - 04:59 PM -
0
செலான் வங்கி பிஎல்சி, இலங்கைக்கு மின்சார வாகனங்களை (EVs) இறக்குமதி செய்யும் நிறுவனமான GS EVO Motors Limited உடன் மூலோபாயக் கூட்டாண்மையில் இணைந்துள்ளது. இவ்விணைவு வழியாக வங்கி, மின்சார வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக லீசிங் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இது நாட்டில் நிலையான போக்குவரத்துக்கான வளர்ந்து வரும் தேவையை ஆதரிக்கும் அதேவேளை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட லீசிங் தீர்வுகளை இலகுவாக அணுகவும் உதவுகிறது.
GS EVO Motors ஊடாக வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக லீசிங் வசதியை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) அண்மையில் கையெழுத்திடப்பட்டது. இத் திட்டம், வாகனங்கள் கிடைப்பதை முறைப்படுத்தப்பட்ட நிதியுதவித் தீர்வுகள், போட்டித்தன்மை வாய்ந்த வட்டி வீதங்கள் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல்களுடன் இணைப்பதன் மூலம் மின்சார வாகனங்கள் வாங்கும் செயல்முறையை எளிமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவ் வசதியின் கீழ் செலான் வங்கி ஏழு ஆண்டுகள் வரையிலான திருப்பிச் செலுத்தும் காலத்துடனான லீசிங் தெரிவுகளை வழங்கவுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள், fast-track வசதி ஊடாக 24 மணி நேரத்திற்குள் ஒப்புதலைப் பெறலாம். இது வாகன உரிமையை விரைவாகப் பெற உதவுவதோடு, சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான போக்குவரத்தை நோக்கிய இலங்கையின் மாற்றத்திற்கும் ஆதரவளிக்கிறது.
செலான் வங்கியின் லீசிங் சேவையானது 10% (A.I.R) இலிருந்து தொடங்கும் வட்டி வீதங்களை வழங்கும். இச் செயல்முறையின்போது பிரத்தியேக லீசிங் குழுவொன்று, வாடிக்கையாளர்களுக்கு லீசிங் செயல்முறை முழுவதும் தனிப்பயனாக்கப்பட்ட உதவியை அளித்து ஆதரவளிக்கும். மேலும், இக் குழு வாடிக்கையாளர்களுக்கு ஆரம்ப விண்ணப்பம் முதல் ஆவணப்படுத்தல் மற்றும் ஒப்புதலுக்குப் பின்னரான நடைமுறைகள் வரை வழிகாட்டுதலை உறுதிசெய்யும் வகையில் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று இலவச ஆலோசனைகளை வழங்கும்.
செலான் வங்கியின் நாடு தழுவிய கிளை வலையமைப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் லீசிங் வசதியைப் பெறுவதோடு செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குரிய உதவியைப் பெற முடியும். எளிதில் அணுகக்கூடிய பசுமை நிதித்தீர்வுகள் மூலம் நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதில் வங்கியின் பரந்த அர்ப்பணிப்பை இவ் இணைவு பிரதிபலிக்கிறது.
இக் கூட்டாண்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “எதிர்காலப் போக்குவரத்தின் முக்கிய அங்கமாக மின்சார வாகனங்கள் மாறி வருகின்றன. GS EVO Motors உடனான இக் கூட்டாண்மை வழியாக செலான் வங்கி, சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான போக்குவரத்தை ஆதரிப்பதோடு இத்தகைய வாகன உரிமையை விரைவாகப் பெறுவதற்கான ஒரு நடைமுறை நிதித்தீர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.” என்று குறிப்பிட்டார்.
GS EVO Motors இன் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியந்த பெரேரா குறிப்பிடுகையில், “செலான் வங்கியுடனான எங்கள் இணைவு, வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை சொந்தமாக்கிக் கொள்வதற்கான தடையற்ற பாதையை வழங்குகிறது. எங்களின் மின்சார வாகனத் தொகுப்பை செலானின் கட்டமைக்கப்பட்ட நிதித்தீர்வுகளுடன் இணைப்பதன் மூலம் பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு நிலையான போக்குவரத்திற்கான அணுகலை எளிதாக்கவுள்ளோம்.” என்றார். இவ் இணைவு ஊடாக மின்சார வாகனங்களுக்கான லீசிங் வசதிகளைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், மேலதிக தகவல்களுக்கு 011-200 88 88 என்ற விசேட தொலைபேசி இலக்கம் வழியாக செலான் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம்.
