Header Logo

வணிகம்
TAGS 2025 விருதுகள் வழங்கலில் தங்க விருதை வென்று SLT-MOBITEL சாதனை தொடர்கிறது தொலைத் தொடர்பாடல் பிரிவில் SLT-MOBITEL தொடர்ந்தும் ஆதிக்கம்

Apr 8, 2026 - 05:02 PM -

0

TAGS 2025 விருதுகள் வழங்கலில் தங்க விருதை வென்று SLT-MOBITEL சாதனை தொடர்கிறது தொலைத் தொடர்பாடல் பிரிவில் SLT-MOBITEL தொடர்ந்தும் ஆதிக்கம்

தனது நிறுவன ரீதியிலான மேன்மைமிக்க பாரம்பரியத்தை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில், SLT-MOBITEL நிறுவனம் தனது 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையூடாக, கௌரவமிக்க TAGS 2025 விருது விழாவில் தொலைத்தொடர்பு பிரிவில் மீண்டும் தங்க விருதைச் சுவீகரித்துள்ளது. 

மீண்டும் ஒருமுறை தங்க விருதை வென்றுள்ள SLT-MOBITEL, பொறுப்புமிக்க ஆளுகை, புத்தாக்கமான அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் அதன் முக்கிய மூலோபாயத்தில் நிலைபேறுதகைமையை உள்வாங்குதல் ஆகியவற்றில் தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, இத்துறைசார் முன்னிலை நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றது. நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு, இந்த அங்கீகாரமானது SLT-MOBITEL தொடர்ந்து நேர்மை, தெளிவு மற்றும் தூரநோக்குடன் செயற்படுவதை உறுதிப்படுத்தும் ஒரு தெளிவான அடையாளமாகும். 

இலங்கை பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வானது, TAGS விருதுகளின் 60ஆவது ஆண்டு நிறைவை வைர அத்தியாயம்: மேன்மைக்கான மாபெரும் கௌரவம் எனும் கருப்பொருளின் கீழ் கொண்டாடியது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் நிலைபேறுதகைமை ஆகியவற்றில் புதிய மைல்கற்களை நிலைநாட்டிய நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. 

இலங்கையின் தேசிய தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், இந்த அங்கீகாரமானது பொறுப்புக்கூறல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு இணைக்கப்பட்ட டிஜிட்டல் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் SLT-MOBITEL கொண்டுள்ள முற்போக்கான அணுகுமுறையை மேலும் உறுதிப்படுத்துகின்றது. அத்துடன், இது நிறுவனத்தின் அறிக்கையிடல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் இத்துறைசார் முன்னோடி என்ற அதன் வகிபாகத்தை உறுதிப்படுத்துவதுடன், நிலைபேறுதகைமையை தடையின்றி ஒருங்கிணைத்தல், டிஜிட்டல் புத்தாக்கங்களைப் பின்பற்றுதல் மற்றும் வெளிப்படையான, நம்பகமான தகவல்களை வழங்குவதில் நிறுவனத்தின் திறனையும் வெளிப்படுத்துகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

அமைச்சருக்கு வகுப்பு எடுப்பதற்கு சபைக்கு வரவில்லை!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

ஓரே மாவட்டத்தில் இரண்டு சட்டம்!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

அஞ்சல் சேவை தொடர்பான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது!

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

தமிழ் மக்களுக்கான நியாயம் எப்போது கிடைக்கபோகிறது?

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுமதி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

குழந்தைகளின் அடிப்படை தேவை என்பது கல்வி!

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

பார்வை ஒரு தடையல்ல!

பார்வை ஒரு தடையல்ல!

title