Apr 9, 2026 - 11:06 AM -
0
நம்பிக்கை, வளர்ச்சி, மற்றும் சிறப்பான சேவையுடனான 25 வருட நிறைவை கொண்டாடும் HNB அஷ்யூரன்ஸ் பிஎல்சி, தன்னுடைய புதிய அடையாளத்தையும் பெயரினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிறுவனம் தற்போது HNB Life பிஎல்சி என மாற்றம்பெற்றுள்ளது. இம்மாற்றமானது எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், தங்களது வாழ்வினை பாதுகாத்துக்கொள்ள மக்களிற்கு உதவுவதையும், அவர்கள் வெற்றி கொள்வதற்கான சுதந்திரத்தினை வழங்குவதையும் நோக்கமாக கொண்ட நிறுவனத்தின் உறுதிப்பாட்டினை வெளிக்காட்டுகின்றது.
இம்மைல்கல்லானது வெறுமனே பெயர் அல்லது இலட்சியினையை மாற்றுவதற்கும் அப்பாலானதாகும். இது கடந்த வருடங்களில் நிறுவனம் அடைந்த உறுதியான வெற்றியின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட முன்னோக்கிய நகர்வாகும். இக்காலப்பகுதியில், நிறுவனம் குறிப்பிடத்தக்களவில் வளர்ச்சியடைந்துள்ளதுடன், சந்தையில் வலுவாகி, அதனது வாடிக்கையாளர்களுக்கான சேவையாற்றலிலும் மேம்பட்டுள்ளது. புதிய இலட்சினையானது சிறகின் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்குறியீடானது மக்கள் முன்னோக்கி நகர HNB Life எவ்வாறு உதவுகின்றது என்பதனை காட்டுகின்றது. தங்களது இலக்குகளை அடைந்துகொள்ளவும், அவர்களுக்கு விரும்பிய வழியில் வாழ்க்கையை வாழவும் நம்பிக்கையை அளித்து அவர்களது வாழ்க்கைப்பயணத்தில் உதவுவதற்கான நிறுவனத்தின் உத்தரவாதத்தினை பிரதிபலிக்கின்றது. புதிய இலட்சியனையானது வியாபார பங்குதாரர்கள், நண்பர்கள், மற்றும் ஊழியர்கள் பங்கேற்ற விசேட நிகழ்வினில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றுகையில், தலைவர், திரு. ஸ்டூவர்ட் சாப்மன், இம்மாற்றம் ஏன் முக்கியமானது என்பதனை விளக்கினார். நாங்கள் 25 ஆண்டுகால முன்னேற்றத்தை கொண்டாடும் வேளையில், HNB Life ஆக மாறுவது எமது வாடிக்கையாளர்களுடன் இணைந்து வளர்வதற்கான எமது திட்டத்தினைக் காட்டுகின்றது. இந்தப் புதிய அடையாளமானது எமது நோக்கத்தினைக் காட்டுகின்றது: மக்கள் உண்மையாக விரும்புவதை செய்யத் தேவையான பலத்தையும் பாதுகாப்பினையும் அவர்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும். கடந்த 25 ஆண்டுகளில் நாங்கள் கட்டியெழுப்பியவற்றைக் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் எதிர்காலத்தைக் குறித்து நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம், என்று அவர் கூறினார். நிறுவனத்தின் புதிய குறிக்கோள் ஒவ்வொரு திருப்பத்திலும் வளருவதற்கான பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துடன், மக்கள் சிறந்த வாழ்க்கையை வாழ உதவுவதில் முன்னணியில் இருப்பதாகும்.
திரு. சாப்மன் மேலும் கூறுகையில், இந்த இலக்கானது வெறும் வார்த்தைகள் அல்ல; இது நாங்கள் செய்யும் அனைத்திற்கும் இதுவே வழிகாட்டியாகும். இது நாம் வெறுமனே எமது தோற்றத்தினை மாத்திரம் மாற்றவில்லை என்பதனைக் காட்டுகின்றது. நாம் எதிர்காலத்தின் மீது எம்மோடு இணையும் ஒவ்வொருவருக்கும் முழுமையான நம்பிக்கை மற்றும் வெற்றியுடனானவொரு எதிர்காலத்தின் மீது இன்னும் அதிகமாக கவனம் செலுத்துகின்றோம். காப்புறுதியை எளிமையானதாகவும், பெறுவதற்கு இலகுவானதாகவும், மற்றும் எமது நாட்டு மக்களது நாளாந்த கனவுகளது உண்மையான அங்கமாகவும் நாம் மாற்றுகின்றோம். என மேலும் தெரிவித்தார்.
எதிர்காலம் குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்ட, தலைமை நிர்வாக அதிகாரி, திரு. லசித விமலரத்ன, கடந்த ஐந்து வருடங்களிலான எமது வெற்றி எதிர்காலத்திற்காக எம்மை மேலும் வலுப்படுத்தியுள்ளது. HNB Life ஆக, எமது வாடிக்கையாளர்களுக்காக விடயங்களை வேகமாகவும் எளிமையானதாகவும் மாற்ற தொழிநுட்பத்தினைப் பயன்படுத்துவதில் நாம் கவனம்செலுத்துகின்றோம். இம்மாற்றமானது விரைவாக மாறும் உலகுடன் இணைந்து வலுவாக செயலாற்றுவதற்கும், நீடித்து நிலைபெறவும் எமக்கு உதவுகின்றது என தெரிவித்தார்.
மேலும், இப்பயணத்தின் முக்கிய அங்கம் ஊழியர்களே என்பதனையும் அவர் அழுத்தமாக கூறினார். எமது முதன்மை நிறுவனமான, ஹற்றன் நேஷனல் வங்கி பிஎல்சி, அதேப்போன்று எமது வங்கியியல் பங்குதாரர்கள், தரகர்கள், மற்றும் எமது அனைத்து வியாபார பங்குதாரர்களுக்கும் நான் பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். கடந்த 25 வருடங்களுக்கும் மேலான எமது வளர்ச்சியில் உங்களது ஆதரவு பாரியதொரு அங்கமாக விளங்குகின்றது. உங்களது கடுமையான உழைப்பு எமது வளர்ச்சியில் உதவியுள்ளதுடன், வரும் வருடங்களிலான எமது வெற்றிக்கும் அடித்தளமாகக் காணப்படும், என அவர் மேலும் கூறினார்.
