Header Logo
Mogo Academy

விளையாட்டு
திடீர் ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீராங்கனை!

Apr 24, 2026 - 04:07 PM -

0

திடீர் ஓய்வை அறிவித்த நியூசிலாந்து வீராங்கனை!
Mobitel inner

மகளிர் கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவரான நியூசிலாந்தின் சூசி பேட்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இங்கிலாந்தில் நடைபெற உள்ள 2026 மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரே இவரது கடைசி சர்வதேச தொடராக இருக்கும். 

கடந்த 2003 இல் உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமான சூசி பேட்ஸ், 2006 ஆம் ஆண்டு நியூசிலாந்து தேசிய அணிக்காக அறிமுகமானார். 

சுமார் 20 ஆண்டாக நியூசிலாந்து அணிக்காக விளையாடிய அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். 2011 முதல் 7 ஆண்டு நியூசிலாந்து அணி தலைவராக இருந்தார். 

மகளிர் டி20 போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த வீராங்கனையாக திகழ்கிறார் (4,717 ஓட்டங்கள்). 

ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளார். (5,964 ஓட்டங்கள்). 

இந்நிலையில், ஓய்வு குறித்துப் பேசிய சூசி பேட்ஸ், 20 ஆண்டு இவ்வளவு சீக்கிரம் கடந்துவிட்டதை நம்ப முடியவில்லை. நியூசிலாந்து சீருடையை அணிந்ததற்காக பெருமைப்படுகிறேன். இங்கிலாந்தில் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை வென்று, வெற்றிகரமாக விடைபெறுவதே எனது இறுதி லட்சியம் என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara