Header Logo

விளையாட்டு
டெல்லி அணியில் கம்பேக் கொடுக்கும் மிட்செல் ஸ்டார்க்!

Apr 24, 2026 - 05:14 PM -

0

டெல்லி அணியில் கம்பேக் கொடுக்கும் மிட்செல் ஸ்டார்க்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தோள்பட்டை மற்றும் முழங்கை காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் போட்டிகளில் இதுவரை விளையாடவில்லை. 

அவுஸ்திரேலிய கோடைக்கால போட்டிகளின்போது ஏற்பட்ட காயங்களுக்காக அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்குப் பதிலாக லுங்கி நிகிடி பந்துவீச்சில் முக்கியப் பங்காற்றி வருகிறார். 

இந்நிலையில், மிட்செல் ஸ்டார்க் உடல் தகுதி அடைந்து விட்டதால் ஐ.பி.எல். தொடரில் ஆடலாம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிட்செல் ஸ்டார்க் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். மே 1 ஆம் திகதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தது.

MOST READ

காணொளி
மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

மீன்பிடித்துறை அமைச்சரால், கொந்தளித்த அர்ச்சுனா

அவசர கால நிலை அமுலில் இருப்பினும்  குற்றங்கள் குறையவில்லை

அவசர கால நிலை அமுலில் இருப்பினும் குற்றங்கள் குறையவில்லை

9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன!

9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன!

எதற்காக இந்த அவசரகால சட்டம்?

எதற்காக இந்த அவசரகால சட்டம்?

அளவுக்கு அதிக வரியால் ஆட்சி முறியும் அபாயம்!

அளவுக்கு அதிக வரியால் ஆட்சி முறியும் அபாயம்!

பாராளுமன்றில் ஜீவன் அதிரடி!

பாராளுமன்றில் ஜீவன் அதிரடி!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

செம்மணி மனித புதைகுழி அகழ்வு!

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

எங்கள் பிரச்சினைகளை ஏன் கேட்கவில்லை?

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

title