Header Logo
Mogo Academy

விளையாட்டு
பெங்களூரு அணி அபார வெற்றி!

Apr 28, 2026 - 11:15 AM -

0

பெங்களூரு அணி அபார வெற்றி!
Mobitel inner

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (27) இடம்பெற்ற போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. 

டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 16.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

துடுப்பாட்டத்தில் டெல்லி அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் போரெல் 30 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் பெங்களூரு அணி சார்பாக ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ரசிக் சலாம், சுயாஷ் சர்மா மற்றும் க்ரூணல் பாண்டியா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். 

76 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 6.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ஓட்டங்களை பெற்று 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் பெங்களூரு அணி சார்பாக அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 34 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். 

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பாக கைல் ஜேமிசன் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

 

அத்தோடு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 9,000 ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். 


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara