May 4, 2026 - 02:01 PM -
0
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04) காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 110 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குநரும், தவெக தலைவர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவிக்கும் போது,
தேர்தல் முடிவுகள் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். என் மகனுக்கு எனது வாழ்த்துகள்.
கடந்த இரண்டு வருடங்களாக தமிழக முதல்வராக வருவேன் என்ற நம்பிக்கை விஜயிடம் இருந்தது. அந்த அணுகுமுறையை நான் பாராட்டுகிறேன்.
ஒரு தலைவராக, கூட்டணி இல்லாமல் சொந்தக் காலில் நிற்பேன் என்றது அவரது துணிச்சல். கூட்டணி இல்லாவிட்டாலும் தேர்தலை சந்திக்கும் தைரியம் விஜயிடம் இருந்தது. இது விஜய்க்கு கிடைத்த சரித்திர வெற்றி.
விஜயை தலைவராக மக்கள் பார்க்கவில்லை. தங்களில் ஒருவராக பார்த்தனர் தமிழக மக்களுக்கு என்னுடைய நன்றி என தெரிவித்தார்.
