Header Logo

செய்திகள்
கப்ரால் மீது இலஞ்ச ஆணைக்குழு மீண்டும் வழக்குத் தாக்கல்

May 7, 2026 - 12:52 PM -

0

கப்ரால் மீது இலஞ்ச ஆணைக்குழு மீண்டும் வழக்குத் தாக்கல்

2012ஆம் ஆண்டில் கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்ததை அறிந்திருந்தும், அந்நாட்டின் பிணைமுறிப் பத்திரங்களை கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

மூன்று மாத காலத்திற்குள் 100 மில்லியன் ரூபா பணத்தை வைப்புச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மீறியதன் காரணமாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 67 (5) பிரிவின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

100 மில்லியன் ரூபா பணத்தை வைப்புச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன்னைய வழக்கை மீளப் பெறுவதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. 

எனினும், குறித்த உடன்படிக்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அந்தப் பணத்தை வைப்புச் செய்து நிபந்தனையை நிறைவேற்றத் தவறியதால், தற்போது மீண்டும் மேல் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டில் கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருந்ததை அறிந்திருந்தும், அந்நாட்டின் பிணைமுறிப் பத்திரங்களை (Bonds) கொள்வனவு செய்ததன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு 184 கோடி ரூபாவிற்கும் அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

மூன்று மாத காலத்திற்குள் 100 மில்லியன் ரூபா பணத்தை வைப்புச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மீறியதன் காரணமாக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 67 (5) பிரிவின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

100 மில்லியன் ரூபா பணத்தை வைப்புச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் முன்னைய வழக்கை மீளப் பெறுவதற்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், குறித்த உடன்படிக்கையின்படி நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் அந்தப் பணத்தை வைப்புச் செய்து நிபந்தனையை நிறைவேற்றத் தவறியதால், தற்போது மீண்டும் மேல் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!