Header Logo

செய்திகள்
3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள் பதிவு

May 7, 2026 - 01:16 PM -

0

 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள் பதிவு

கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற இந்த முறைப்பாடுகளில் சுமார் 2,300 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.

அவர் வெளியிட்ட தரவுகளின்படி:

பெண்களுக்கு எதிராக 4,103 சைபர் குற்றப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 753 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 3,348 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளும் வழக்குத் தாக்கல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிடைக்கப்பெற்ற 3,159 முறைப்பாடுகளில் 982 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஏனைய 2,177 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து 4,742 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் 572 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், மேலும் 4,170 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்ள வேண்டாம்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

தனியார் வகுப்பு மாணவர்களுக்காகக் குரலெழுப்பிய பொதுமக்கள்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

மட்டக்களப்பில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!

தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள்!