May 7, 2026 - 05:31 PM -
0
2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் கல்வி ஆண்டிற்காக தரம் 6 மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான இரண்டாம் கட்ட மேன்முறையீடுகளை பொறுப்பேற்கும் பணிகள் நாளை (08) முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, 2026 மே 08 முதல் மே 29 வரை இணையவழி (Online) ஊடாக மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk என்பதற்குச் சென்று அதிகபட்சம் 3 பாடசாலைகளுக்காக மேன்முறையீடு செய்ய முடியும் என்பதுடன், http://g6application.moe.gov.lk எனும் நேரடி இணைப்பு ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் மாத்திரமே மேன்முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால், தகுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் உரிய காலத்திற்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
