May 7, 2026 - 11:51 PM -
0
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (To Lam) சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
அவருடன் 209 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
மும்பையிலிருந்து வியட்நாம் எயார்லைன்ஸிற்கு சொந்தமான VN-1 என்ற விமானம் மூலம் வியட்நாம் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
