Header Logo

செய்திகள்
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சஜித் வாழ்த்து!

May 10, 2026 - 09:04 PM -

0

 தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சஜித் வாழ்த்து!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று, மாநிலத்தில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள  சி. ஜோசப் விஜய்  அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,

சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ள கருத்துக்கள் வரவேற்கத்தக்கவை. வெறுப்பு மற்றும் பழைய காயங்களின் மீது மட்டுமே கட்டப்படும் சமூகங்கள் இறுதியில் தனித்துவிடப்படும் என்பதை வரலாறு நமக்குக் காட்டியுள்ளது. மாறாக, நீதி மற்றும் சகவாழ்வின் மீது கட்டப்படும் சமூகங்களே மக்கள் உண்மையாக வாழ விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கும் வல்லமை கொண்டவை.

உலகம் ஏற்கனவே பல்வேறு பிரிவினைகளால் நிறைந்துள்ள சூழலில், நம் பிராந்தியத்தில் உள்ள மக்கள் அனைவரும் மொழி, மதம் அல்லது அடையாளம் கடந்து உண்மையாக எதிர்பார்ப்பது சமூக முன்னேற்றம், நீதி மற்றும் நிலையான தன்மையையே ஆகும். நம்மைப் பிரிக்கும் காரணிகளை விட, நம்மிடையே உள்ள பொதுவான பண்புகளும் ஒற்றுமைகளும் மிக அதிகம் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் தொடங்கியுள்ள இந்தப் புதிய அத்தியாயம் முன்னேற்றத்தையும், கருணையையும் கொண்டு வரும் என சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கடந்த காலத்தில் மற்றவர்களால் இடைவெளிகள் உருவாக்கப்பட்ட இடங்களில், ஆழமான புரிதலை ஏற்படுத்துவதற்கான ஆற்றலை இந்தப் புதிய தலைமை வழங்கும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title