May 11, 2026 - 12:26 AM -
0
அசர்பைஜானில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் உறுப்பினரான மனோஜ் சுரங்க அல்லது 'படுவத்தே சாமர' என்பவர் நேற்று(10) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேகநபர் இந்தியா ஊடாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரை அழைத்து வருவதற்காக இலங்கைப் பொலிஸ் குழுவொன்று கடந்த 7ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
