Header Logo

செய்திகள்
ஈரானின் பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது - டிரம்ப்

May 11, 2026 - 06:32 AM -

0

ஈரானின் பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது - டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவுகளுக்கு ஈரான் அளித்த பதில் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஊடகங்களின்படி, பாகிஸ்தான் ஊடாக அனுப்பப்பட்ட தெஹ்ரானின் முன்மொழிவில் பின்வரும் கோரிக்கைகள் உள்ளடங்கியிருந்தன:

போரை உடனடியாக நிறுத்துதல்.

அமெரிக்காவின் கடற்படை முற்றுகைகளை முடிவுக்குக் கொண்டு வருதல்.

ஈரான் மீது இனி தாக்குதல்கள் நடத்தப்படாது என்ற உத்தரவாதத்தை வழங்குதல்.

இருப்பினும், தனது Truth Social கணக்கில் பதிவிட்டுள்ள டிரம்ப், "ஈரான் பிரதிநிதிகளிடமிருந்து வந்த பதிலை நான் இப்போதுதான் வாசித்தேன். எனக்கு அது பிடிக்கவில்லை - அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா முன்வைத்துள்ள 14 அம்சக் கோரிக்கைகளில் பின்வருவன அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது:

ஈரானின் அணுசக்தி செறிவூட்டலை நிறுத்துதல்.

பொருளாதாரத் தடைகளை நீக்குதல்.

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக தடையற்ற போக்குவரத்தை மீண்டும் நிலைநிறுத்துதல்.

ஈரான் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை மறித்து வருவதால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. 

அதேவேளை, தெஹ்ரானை அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு உடன்பட வைப்பதற்காக, ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்காவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் ஈரானின் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title