Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஆபாச சைகை காட்டியதற்காக RCB வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதிப்பு!

May 12, 2026 - 01:48 PM -

0

ஆபாச சைகை காட்டியதற்காக RCB வீரர் டிம் டேவிட்டுக்கு அபராதம் விதிப்பு!
Mobitel inner

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஆபாச சைகை காட்டியதற்காக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டிம் டேவிட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

டிம் டேவிட்டின் போட்டி ஊதியத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ (Level 1) மீறியதற்காகவும், அநாகரீகமான சைகை செய்ததற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அவருக்கு 2 குறைபாட்டு புள்ளிகளும் (demerit points) வழங்கப்பட்டுள்ளன. 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடைசி பந்தில் ஆர்சிபி பெற்ற விறுவிறுப்பான வெற்றிக்குப் பிறகு, அவர் நடுவிரலை உயர்த்தி காட்டியதாகக் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி பிளே - ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara