Header Logo

செய்திகள்
ஜனாதிபதியின் வாழ்த்துக்கு விஜய் நெகிழ்ச்சியுடன் நன்றி

May 12, 2026 - 04:59 PM -

0

 ஜனாதிபதியின் வாழ்த்துக்கு விஜய் நெகிழ்ச்சியுடன் நன்றி

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய் க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வர்த்தக ரீதியாக ஆழமான பிணைப்பைக் கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த வாழ்த்துச் செய்திக்குத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், "இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் வாழ்த்துக்களால் நான் மிகுந்த கௌரவமடைகிறேன். உங்களது அன்பான இந்தச் செயலுக்கு எனது நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே, அண்டை நாட்டுத் தலைவரிடமிருந்து கிடைத்த வாழ்த்தும், அதற்கு முதலமைச்சர் அளித்துள்ள நாகரீகமான பதிலும் அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title