Header Logo

செய்திகள்
பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

May 12, 2026 - 05:12 PM -

0

பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நிலைமைக்கு ஏற்ப, 'முதலாம் கட்டம்' (விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்) மற்றும் 'இரண்டாம் கட்டம்' (கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்) ஆகியவற்றின் கீழ் இந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், பின்வரும் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு 'விழிப்புடன் இருக்குமாறு' (Level 1) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: பண்டாரவளை

களுத்துறை மாவட்டம்: வலல்லாவிட்ட

கண்டி மாவட்டம்: உடபலாத, பாதஹேவாஹெட்ட, கங்க இஹல கோரளை, அக்குரணை, கங்கவட்ட கோரளை, தொலுவ, பஸ்பாகே கோரளை

கேகாலை மாவட்டம்: அரநாயக்க, ரம்புக்கனை, மாவனல்லை, கேகாலை, புலத்கோஹுபிட்டிய, யட்டியாந்தோட்டை

குருநாகல் மாவட்டம்: ரிதீகம

மாத்தளை மாவட்டம்: ரிதிகம, நெலுவ, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை

மொனராகலை மாவட்டம்: வெல்லவாய, படல்கும்புர

இரத்தினபுரி மாவட்டம்: கலவானை, கொடகவெல மற்றும் இரத்தினபுரி

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இந்த எச்சரிக்கை இன்று (12) மாலை 4.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும்.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title