Header Logo

செய்திகள்
கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு; உதவி கோரி நிற்கிறது - டிரம்ப்

May 12, 2026 - 06:06 PM -

0

கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு; உதவி கோரி நிற்கிறது - டிரம்ப்

கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு என்றும், அது தற்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:

"குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எவரும் கியூபா குறித்து என்னிடம் பேசியதில்லை. கியூபா ஒரு தோல்வியடைந்த நாடு, அது வீழ்ச்சியை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. தற்போது கியூபா  அமெரிக்காவிடம் உதவி கோரி வருகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பேசுவோம். இதற்கிடையில், நான் சீனாவுக்குப் புறப்படுகிறேன்" என அவர் பதிவிட்டுள்ளார்.

கியூபாவின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலையை மிகக் கடுமையாகச் சாடியுள்ள டிரம்ப், அந்த நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள அமெரிக்காவின் உதவி தேவை என்பதைத் தனது பாணியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கியூபா விவகாரத்தில் தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் என்பதையும் அவர் தனது பதிவின் மூலம் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title