Header Logo

செய்திகள்
கணினி குற்றங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் குழுவொன்று விளக்கமறியலில்

May 13, 2026 - 12:06 AM -

0

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் குழுவொன்று விளக்கமறியலில்

கணினி குற்ற வலைப்பின்னல் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் குழுவொன்றை மீண்டும் விளக்கமறியலில் வைக்க காலி பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காலி துறைமுக பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 09 சந்தேகநபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையிலும், தொடந்துவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 55 சந்தேகநபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் காலி பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட ஏனைய சந்தேகநபர்களை தனிப்பட்ட பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடந்துவ பிரதேசத்தில் 55 பேரும், காலி பொலிஸ் பிரிவில் 110 பேரும், காலி துறைமுக பொலிஸ் பிரிவில் 23 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்ட இந்திய மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

காலி மற்றும் காலி துறைமுக பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி பிரதான நீதவான் சமீர தொடங்கொட முன்னிலையிலும், ஹிக்கடுவ - தொடந்துவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டவர்கள் காலி மேலதிக நீதவான் மஹேஷிகா விஜேசிங்க முன்னிலையிலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title