Header Logo

செய்திகள்
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சி

May 15, 2026 - 03:08 PM -

0

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி இன்றும் (15) பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. 

அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 331 ரூபாய் 15 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

மத்திய வங்கியினால் இன்று (15) வெளியிடப்பட்ட நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323.53 ரூபாயாகவும், விற்பனை விலை 331.15 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதிக்குப் பின்னர், டொலரின் கொள்முதல் விலை 323 ரூபாயையும் விற்பனை விலை 331 ரூபாயையும் தாண்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

2023 டிசம்பர் 05 ஆம் திகதியன்று டொலரின் கொள்வனவு விலை 323 ரூபாயாகப் பதிவாகியிருந்ததுடன், அதன் விற்பனை விலை 333.20 ரூபாயாகக் காணப்பட்டது. 

அதன்படி, 2023 டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர், இரண்டு வருடங்கள் கழித்து டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகூடிய பெறுமதியைப் பதிவு செய்த முதல் சந்தர்ப்பமாக இன்றைய நாள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title