May 15, 2026 - 04:42 PM -
0
நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் 4 வெற்றி, 6 தோல்வி என 9 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வகையில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான ரச்சின் ரவீந்திரா நாடு திரும்பியுள்ளார் என கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் நியூசிலாந்து அணி இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தத் தொடருக்கு தயாராகும் வகையில் ரச்சின் ரவீந்திரா நாடு திரும்பியுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் நியூசிலாந்து அணி 2 ஆவது இடத்தில் நீடிக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ரச்சின் ரவீந்திரா ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
