Header Logo

செய்திகள்
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் பல வெளிநாட்டினர் கைது

May 15, 2026 - 07:04 PM -

0

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மேலும் பல வெளிநாட்டினர் கைது

களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் செல்லுபடியாகும் விசா இன்றி தங்கியிருந்த 10 சீன நாட்டு ஆண்கள், ஒரு மலேசிய நாட்டு ஆண், இரண்டு சீன நாட்டுப் பெண்கள் மற்றும் ஒரு மலேசிய நாட்டுப் பெண் ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த ஹோட்டலினுள் பாரிய அளவிலான கணினி குற்றச்செயல்களை முன்னெடுப்பதற்கான பிரதான மத்திய நிலையம் ஒன்றின் ஆரம்பக்கட்ட நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, தனியார் வணிகம் என்ற பெயரில் பதிவு செய்து இந்த மோசடியை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கடும் மழை ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைவருக்கும் சட்டம் சமன்!

அனைவருக்கும் சட்டம் சமன்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

title