Header Logo

செய்திகள்
பலத்த மழை தொடர்கிறது - பல ஆறுகளில் சிறு வெள்ளப்பெருக்கு

May 22, 2026 - 10:08 PM -

0

பலத்த மழை தொடர்கிறது - பல ஆறுகளில் சிறு வெள்ளப்பெருக்கு

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெற்று வருவதால், இன்று (22) இரவும் நாளை (23) தினமும் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக 336.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கேகாலை, பம்பேகம தோட்டத்தில் பதிவாகியுள்ளது. 

அத்துடன் கிரிந்திவெல பகுதியில் 332 மி.மீ, அவிசாவளை பென்ரித் தோட்டத்தில் 291.5 மி.மீ, கலடுவாவ பகுதியில் 237 மி.மீ, லபுகம பகுதியில் 224.4 மி.மீ மற்றும் ஹங்வெல்ல பகுதியில் 216 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 

பெய்து வரும் பலத்த மழை காரணமாக களனி கங்கை, களு கங்கை, மஹா ஓயா மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகள் பல இடங்களில் சிறு வெள்ள மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 

களனி கங்கை படுகையின் ஹங்வெல்ல பகுதிக்கு கீழ்மட்டத்திலுள்ள சீதாவக்க, தொம்பே, பாதுக்கை, ஹோமாகம, பியகம, கடுவலை, கொலன்னாவை, களனி, வத்தளை மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் அடுத்த 48 மணித்தியாலங்களில் சிறு வெள்ள பாதிப்புக்குள்ளாகலாம் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. 

இதனால் கொழும்பு - அவிசாவளை பிரதான வீதி பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், புவக்பிட்டிய தும்மோதர சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா மற்றும் யடியந்தோட்டை ஆகிய பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. 

ஹங்வெல்ல - நிட்டம்புவ பிரதான வீதி பூகொட நகரில் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, களு கங்கை பெருக்கெடுத்து வருவதால் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத மற்றும் கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளுக்கும் சிறு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்தனகலு ஓயா மற்றும் ஏனைய மாவட்டங்களின் நிலைமை அத்தனகலு ஓயா படுகையை ஒட்டிய தூனமலே பகுதியில் 200 மி.மீ க்கும் அதிக மழை பதிவாகியுள்ளதால் கம்பஹா, மீரிகம, அத்தனகல்ல, மஹர, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டானை, திவுலபிட்டிய மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது. 

அதிக மழை காரணமாக மீரிகம - நீர்கொழும்பு பிரதான வீதியின் மெல்லவகெதர பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள பாலம் முழுமையாக உடைந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 

மழை காரணமாக ருவன்வெல்ல பகுதியில் 3 பாடசாலைகளும், தெஹியோவிட்ட பகுதியில் 4 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

அத்துடன், சிலாபம் பொது வைத்தியசாலையின் 3 வார்டுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் நோயாளர்கள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். புத்தளம் பகுதியில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. 

இன்று அதிகாலை வீசிய சுழற்காற்றினால் சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் பெரிய மரமொன்று முறிந்து விழுந்ததுடன், புத்தளத்தில் பல வீடுகளும் சேதமடைந்துள்ளன. பன்னல - குளியாப்பிட்டிய வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

மழை நிலைமையைக் கருத்திற் கொண்டு 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் 7 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு '3ஆம் கட்டத்தின்' கீழான "வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை" விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் 5 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, கொஸ்கம பொஹொரபாவ பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், வீட்டின் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி உறங்கிக்கொண்டிருந்த 65 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்றும் நாளையும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

நாட்டில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டும்!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

மக்கள் அச்சமடைய தேவையில்லை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏன் இந்த நிலை!

title